பொதுஜன பெரமுன மோசடி செய்ததாக ஜனாதிபதி கூறவில்லை: மகிந்த அமரவீர

Report Print Steephen Steephen in அரசியல்

தாமரை கோபுரத்தை நிர்மாணிப்பதில் 200 கோடி ரூபாய் மோசடி நடந்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறினாலும் அந்த மோசடியுடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஒருவர் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறவில்லை என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். அரசியல்வாதிகள் மாத்திரம் ஊழல், மோசடிகளில் ஈடுபடுவதில்லை. அதிகாரிகளும் ஊழல், மோசடிகளில் ஈடுபடுவார்கள்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட தகவல் தொடர்பாக சில தரப்பினர் தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பாக தொலைத் தொடர்புகளை ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழு அறிக்கையை தயாரித்து வருகிறது.

இதனை தவிர சீனாவும் பதிலளிக்க உள்ளது. இது தொடர்பாக தகவலை ஒரு தரப்பு ஜனாதிபதிக்கு வழங்கியுள்ளது. இந்த மோசடியை அதிகாரிகளும் செய்திருக்க முடியும் எனவும் மகிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.