பயங்கரவாதத்தை தடுக்க புதிய சட்டம்

Report Print Steephen Steephen in அரசியல்

பயங்கரவாதத்தை தடுக்க புதிய சட்டத்தை உருவாக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதனடிப்படையில் பயங்கரவாதத்தை தடுப்பதற்காக தற்காலிகமான வரையறைக்கு உத்தரவிடுதல், பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதை தடை செய்தல், அறிவிக்கப்பட்ட வெளிநாடு ஒன்றில் இருப்பது, உயிரியல் தரவுகளை நிர்வகித்தல் ஆகிய துறைகள் சம்பந்தமான சட்டங்கள் உருவாக்கப்பட உள்ளன.

இது தொடர்பாக பரிந்துரைகளை முன்வைக்க இதற்கு முன்னர் அமைச்சரவை உப குழு நியமிக்கப்பட்டது.

இந்த குழு முன்வைத்துள்ள யோசனைகளுக்கு அமைய நடைமுறையில் இருக்கும் சட்டத்தில் திருத்தங்களை செய்வது அல்லது பொருத்தமான சட்டங்களை உருவாக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன இணைந்து இந்த அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்திருந்தனர்.