நாடாளுமன்ற உறுப்பினர்களை கவலையில் ஆழ்த்தியுள்ள ஜனாதிபதி மைத்திரி

Report Print Vethu Vethu in அரசியல்

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வழங்கப்படவிருந்த இரண்டு இலட்சம் ரூபா மேலதிக கொடுப்பனவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இடைநிறுத்தியுள்ளார்.

சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அடிப்படையாகக் கொண்டு பணிப்பகிஷ்கரிப்புகளும் ஆர்ப்பாட்டங்களும் முன்னெடுக்கப்படும் நிலையில் ஜனாதிபதி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை கோரி பல்வேறு தரப்பினர் வீதியில் இறங்கி நாட்டின் செயற்பாடுகளைக் குழப்பம் ஏற்படுத்துகின்றனர்.

பிரதமர் உள்ளிட்ட குழுவினர் தமது இலாபத்திற்காக மக்களின் நிதியை வேண்டுமென்றே செலவிட்டு, தமக்குத் தேவையானவர்களுக்கு நியமனம் மற்றும் சலுகைகளை வழங்கி வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

குருணாகலில் இன்று இடம்பெற்ற நிகழ்வின் போது இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

மேலதிக கொடுப்பனவுகள் கிடைக்கும் என காத்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதியின் அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளதாக தெரிய வருகிறது.