பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை கைது செய்ய முயற்சி?

Report Print Murali Murali in அரசியல்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை கைது செய்வது தொடர்பிலான ஆலோசனைகள் இடம்பெற்று வருவதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் இடம்பெற்றதாக கூறப்படும் பிணைமுறி மோசடி விவகாரம் தொடர்பிலேயே பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை கைது செய்ய ஆலோசிக்கப்பட்டு வருவதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக இலங்கை மத்திய வாங்கி நிதி மோசடி தொடர்பான அல்லது விவசாய அமைச்சின் கட்டிட விவகாரம் ஊடக பிரதமரை கைது செய்வதற்கான பேச்சுக்கள் உயர்மட்டத்தில் இடம்பெற்றதாக கூறப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டதன் பின்னர், அமைச்சர் சஜித் பிரேமதாஸவை பிரதமராக நியமிக்கவும், ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவை வேட்பாளராக அறிவிக்கவும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதான அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இந்த கூட்டணியில் முஸ்லிம் கூட்டணிகளை இணைக்கவும், மக்கள் விடுதலை முன்னணியை இணைக்கவும் பேச்சுவார்த்தைகள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.