அலரி மாளிகையை சுற்றிவளைக்க தயாராகும் சஜித் தரப்பு

Report Print Vethu Vethu in அரசியல்

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை உடனடியாக நியமிக்குமாறு கோரி அலரி மாளிகையை சுற்றிவளைக்க சஜித் தரப்பினர் தீர்மானித்துள்ளனர்.

ஜனாதிபதி தேர்தலுக்காக திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து, வேட்பாளரை பெயரிடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அழுத்தம் கொடுக்க சஜித் தரப்பினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

தமது கோரிக்கைக்கு சாதகமான பதிலை ரணில் வழங்க மறுத்தால், வேட்பாளரின் பெயரை அறிவிக்கும் வரையில் அலரி மாளிகையை சுற்றிவளைத்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர்.

ஜனாதிபதி தேர்தல் நடைபெற சில மாதங்கள் உள்ள நிலையில், வேட்பாளரை அறிவிக்காமை, ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கட்சியை சேர்ந்த இராஜாங்க அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

வார இறுதிக்குள் பெயரிட நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றால் அலரி மாளிகை சுற்றிவளைக்கப்பட்டு சஜித்தை பெயரிடுமாறு ஆர்ப்பாட்டம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

You My Like this video