ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்களுக்கிடையில் விசேட சந்திப்பு

Report Print Kamel Kamel in அரசியல்

ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்கள் இன்றைய தினம் விசேட சந்திப்பு ஒன்றை நடாத்த உள்ளனர்.

இன்று பிற்பகல் 6.00 மணிக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது குறித்து இந்த வாரத்தில் தீர்மானம் எடுக்கப்பட உள்ளதாக கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.