நாடாளுமன்றில் விறுவிறுப்பு: தேர்தல்கள் ஆணையாளரை நாடுகின்றார் சபாநாயகர்

Report Print Gokulan Gokulan in அரசியல்

நாட்டில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நல்லாட்சி அரசாங்கம் இன்றைய தினமும் கூட அரச நியமனங்களை தொடர்ச்சியாக வழங்கி வருவதாக முன்னாள் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்கான அதிவிசேட வர்த்தமானி அறிக்கை நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்டுள்ளது. எனவே, அரச நியமனங்கள் அனைத்தும் இரத்து செய்யப்பட வேண்டுமென அவர் சபையில் சுட்டிக்காட்டினார்.

இதன்போது ஆளும் மற்றும் எதிர்கட்சின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் விறுவிறுப்பு நிலை தோன்றியது.

முன்னாள் அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் கூற்றுக்கு பதிலளித்த நிதியமைச்சர் மங்கள சமரவீர, இவர்களின் ஆட்சியின் போதும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றன. 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 7ஆம் திகதிகூட இவர்கள் அரச நியமனங்களை வழங்கியது அனைவரும் அறிந்ததே.

இவர் மரணித்து மீண்டும் உயிர்பெற்றவர் போல் கருத்து தெரிவிக்கின்றார்.அவர்கள் செய்வதை அவர்கள் மறந்திருந்தாலும் கூட நாட்டுமக்கள் அது எதனையும் மறக்கவில்லை.

இதன்போது சபையில் எழுந்து நின்ற ஆளும் கட்சியின் பிரதம கொறடா அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரச நியமனங்களை வழங்குவதில் எந்தவித தவறும் இல்லை. அது தேர்தல் விதிமுறைகளுக்கு முரணானதும் அல்ல என்று தெரிவித்தார்.

வேட்புமனு தாக்கல் செய்தன் பின்னர் அரச நியமனங்களை வழங்கினால் அது தேர்தல் விதிமுறைகளை மீறுவது ஆகும். எவ்வாறாயினும் நல்லாட்சி அரசாங்கம் தேர்தல் விதி முறைகளை மீறியுள்ளதா என்பதை குறித்து ஆராய்வதற்கு தாம் தேர்தல்கள் ஆணையாளரின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்வதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.

இதன்போது, சற்று ஆத்திரமடைந்ந்த முன்னாள் அமைச்சர் தினேஷ் குணவர்தன,சபாநாயகர் பக்கச்சார்பாக செயற்படுவதாக குற்றம் சுமத்தினார். இதன் போது மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

இன்று சபாநாயகராக உள்ள நீங்கள் நாளை ஜனாதிபதி வேட்பாளர் இவ்வாறான குற்றங்கள் நடக்காமல் இருக்க நீங்கள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மட்டுமன்றி நீங்கள் ஆளும் கட்சியினருக்கு பக்கச்சார்பாக செயற்ப்படுகின்றீர்கள் என்று தெரிவித்தார்.