யாருக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு..? வடமாகாண முன்னாள் அவைத் தலைவர்

Report Print Sumi in அரசியல்

தமிழ் மக்களுக்கு உரிய தீர்வினை முன்வைப்பவருக்கு இம்முறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் மக்களும் ஆதரவினை வழங்க வேண்டும் என வடமாகாண சபையின் முன்னாள் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

அண்மையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் பேசும்போது ஒரு வருட காலத்திற்குள் தீர்வு வழங்கப்படும் என தெரிவித்திருந்தார்.

அவர் ஒரு வருடத்தில் தீர்வு என்கின்றார். இன்னொருவர் ஆறு மாதத்திற்குள் தீர்வு என்கின்றார். எவரையும் நம்ப முடியாது.

எனவே நமக்கு கடந்த காலத்தில் நல்ல அனுபவங்கள் உள்ளது. எனவே இனிவரும் காலத்தில் தமிழ் மக்களுக்கு உரிய தீர்வினை முன்வைக்க தயாராக உள்ளவருக்கு எமது ஆதரவினை அளிக்க தயாராக இருக்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.