ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான அறிவிப்பு! பிரதமர் இன்று பிறப்பித்துள்ள உத்தரவு

Report Print Steephen Steephen in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான ஜனநாயக தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் எதிர்வரும் புதன்கிழமை அறிவிக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.

ஜனநாயக தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பதற்காக வெளிநாடு சென்றுள்ள அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களை நாடு திரும்புமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று உத்தரவிட்டுள்ளார்.

பிரதமரின் உத்தரவுக்கு அமைய வெளிநாடு சென்றுள்ள சகல அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை நாடு திரும்ப உள்ளனர்.

ஜனநாயக தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துமாறு இரண்டு பேர் கடிதம் மூலம் பிரதமரிடம் கோரியுள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச, சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோரையே ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துமாறு கோரப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான ஜனநாயக தேசிய முன்னணியின் சார்பில் ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தப்படும் வேட்பாளர் தொடர்பான இறுதி தீர்மானம் தமக்கு எதிர்வரும் சனிக்கிழமைக்குள் கிடைக்க வேண்டும் என சிவில் அமைப்புகள் மற்றும் வெகுஜன அமைப்புகள் அறிவித்துள்ளன.

You My Like this video