தேர்தலை இலக்காகக் கொண்டே போராட்டங்கள் இடம்பெறுகின்றன!

Report Print Abdulsalam Yaseem in அரசியல்

எதிர்வரும் தேர்தலை இலக்காகக் கொண்டு எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச சார்பு தொழிற்சங்கங்கள் போராட்டங்களை முன்னெடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று காலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்,

நேற்று நாடு முழுவதும் பல தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டன. இந்த போராட்டங்களின் பின்னனியில் மஹிந்த ராஜபக்சவே உள்ளார்.

தேர்தல் காலங்களில் நாட்டில் குழப்பங்களை தூண்டிவிட்டு இவர்கள் வாக்கு சேகரிக்க முயற்சி செய்கின்றனர்.

இன்று தொழிற்சங்கங்கள் சுதந்திரமாக தமது போராட்டங்களை முன்னெடுத்துச் செல்ல சுதந்திரத்தை வழங்கியது நாமே. கடந்த ஆட்சியில் இவ்வாறான போராட்டங்கள் நடைபெற்றால் அடுத்தநாள் அவர்களின் வீடுகளுக்கு வெள்ளை வான் வந்த வரலாறே காணப்பட்டது.

1000 ரூபாயாவது உயர்த்தி தாருங்கள் என கேட்கும் வல்லமை கடந்த அரசின் காலத்தில் இந்த தொழிசங்கங்களுக்கு இருக்கவில்லை.

நேற்று ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்துவரும் ஓரிரு நாட்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு மற்றும் நாடாளுமன்றக் குழு இணைந்து வெற்றிபெறும் வேட்பாளரை தெரிவு செய்யும்.

இவர்கள் என்ன குழப்பங்கள் செய்தாலும் நாம் பெயரிடும் வேட்பாளர் நவம்பர் 17ஆம் திகதி ஜனாதிபதியாக பதவி ஏற்பது உறுதி என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers