விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் எதிர்பாராத முடிவுகள் எட்டப்படுமா..?

Report Print Steephen Steephen in அரசியல்

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை விசேட அமைச்சரவைக் கூட்டம் நடத்தப்பட உள்ளதாக தெரியவருகிறது.

இந்த விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சியை ஒழிப்பதற்காக 20ஆவது திருத்தச் சட்டத்தை கொண்டு வருவது சம்பந்தமாக கலந்துரையாடப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இதன்போது அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பன நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக தெரியவருகின்றது.

மேலும், மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பனவும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக தெரியவருகின்றது.

மேலும், மகிந்த ராஜபக்ச தரப்பினரின் நிலைப்பாடு இதுவரை தெரியவராத நிலையில், அவர்களும் இதற்கு ஆதரவளிப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக தென்னிலங்கை அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பது சம்பந்தமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் இன்று முற்பகல் பேச்சுவார்த்தை ஒன்றும் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

You May Like this Video


Latest Offers