தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் நியமனங்கள் வழங்கப்படலாமா?

Report Print Gokulan Gokulan in அரசியல்

நாட்டில் தேர்தல் அறிவிப்பொன்று வெளியிடப்பட்டதன் பின்னர் எந்தவொரு அரச நியமனங்களையும் வழங்க முடியாதென தேர்தல்கள் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

இன்று எமது செய்தி சேவைக்கு பிரத்தியேகமாக கருத்து தெரிவிக்கையிலேயே இந்த விடயத்தை கூறினார்.

மேலும் தெரிவிக்கையில்,

தேர்தல் காலங்களில் அரச நியமனங்கள் வழங்கப்பட்டால் அது தேர்தல் விதிமுறைகளை மீறும் குற்றச்சாட்டு ஆகும்.

எவ்வாறாயினும் தேர்தல்கள் அறிவிக்கப்படுவதற்கு முன்பதாக விண்ணப்பம் கோரி நேர்முகபரீட்சைகளுக்கு முகம் கொடுத்து நியமனங்களை வழங்குவதற்கு திகதி நிர்ணயிக்கப்பட்டிருந்தால் அது தேர்தல் விதிமுறைகளை மீறும் நடவடிக்கையாக கருத்தப்படாது என தெரிவித்தார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது முன்னாள் அமைச்சர் தினேஷ் குணவர்தன, தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் அரச நியமனங்களை வழங்குவதாக அரசின் மீது குற்றச்சாட்டொன்றை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.