ரணில் தரப்புக்கு ராஜபக்சவினருடன் உடன்பாடா? சந்தேகிக்கும் ராஜாங்க அமைச்சர்

Report Print Steephen Steephen in அரசியல்

ராஜபக்சவினர் தேவைக்கு அமைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க உட்பட சிறிய தரப்பினர், அமைச்சர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதை எதிர்க்கின்றனரோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக ராஜாங்க அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.

இம்முறை ஜனாதிபதித் தேர்தல் சம்பந்தமாக கட்சி எடுக்கும் தீர்மானத்தின் அடிப்படையில் தனது எதிர்கால அரசியலை தீர்மானிக்க போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

எதிர்வரும் தேர்தல் தொடர்பாக எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில் எமது அரசியல் தீர்மானிக்கப்பட வாய்ப்புள்ளது.

எமக்கு அரசியல் வெற்றி தேவை என்பதே இதற்கு காரணம். கட்சி வெற்றி பெற வேண்டும்.

கட்சியை வெற்றி பெற செய்யக் கூடிய வேட்பாளர் இருக்கின்றார் என்றால், அந்த வேட்பாளரை நிறுத்தி வெற்றி பெற கட்சியின் தலைமை விரும்பவில்லை என்றால் என்ன செய்வது.

நாமும் தீர்மானம் ஒன்றை எடுக்க நேரிடும். இதனை மக்களுக்கு நாங்கள் சொல்ல வேண்டும். எப்படியான ஒழுக்காற்று விசாரணைகளை நடத்தினாலும் நான் இதனை கூறுவேன்.

எதிர்க்கட்சியுடன் ஒரு உடன்பாடாக இருந்து இருக்கலாம் என நான் நினைக்கின்றேன் என அசோக அபேசிங்க குறிப்பிட்டுள்ளார்.