அமைச்சர் சஜித்தின் வடக்கு விஜயம் இரத்து

Report Print Sumi in அரசியல்

வடக்கில் எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சர் சஜித் பிரேமதாச கலந்து கொள்ளவிருந்த நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை சாவகச்சேரி கிளிநொச்சி மற்றும் மன்னார் தேசிய பாடசாலைகளுக்கு வீடமைப்பு மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சின் நிதியொதுக்கீட்டின் கீழ் மூன்று பேருந்து வண்டிகள் வழங்கும் நிகழ்வு அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், பிரதம விருந்தினராக அமைச்சர் சஜித் பிரேமதாஸ கலந்து கொண்டு பேருந்து வண்டிகள் பாடசாலை நிர்வாகத்திடம் கையளிப்பதாகவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

எனினும் திடீரென்று இன்று அதிகாலை குறித்த அமைச்சினால் மூன்று பாடசாலைகளுக்குமான அந்த நிகழ்வு பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.