ரணிலுக்கு பலத்த ஏமாற்றம்! பங்காளிக் கட்சிகள் விடுத்துள்ள அதிரடி அறிவிப்பு

Report Print Jeslin Jeslin in அரசியல்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு அமைச்சர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க, மனோ கணேசன் மற்றும் ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட தரப்பினர் ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளனர்.

அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இந்த தகவலை தனது டுவிட்டர் பதிவின் ஊடாக உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும், அமைச்சர்களான ரிசாட் பதியுதீன் மற்றும் பழனி திகாம்பரம் ஆகியோரும் சஜித்திற்கு ஆதரவு வழங்குவதாக உறுதியளித்துள்ளனர் எனவும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

புதிய இணைப்பு

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை ஒழிக்க எடுக்கப்படும் எந்த நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்க போவதில்லை என அமைச்சர் சஜித் பிரேமதாச தலைமையிலான அவருக்கு ஆதரவளிக்கும் அணியினர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அறிவித்துள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

மேலும் அவர்,

ஜனாதிபதித் தேர்தலின் பின்னரே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை ஒழிப்பது தொடர்பான எந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், இப்படியான நடவடிக்கையை மேற்கொள்வது பொருத்தமற்றது என பிரதமரிடம் அறிவித்துள்ளோம்.

அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் என்ற வகையில், அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு தமது முழுமையான ஆதரவை வழங்குவதாக அமைச்சர்கள் பாட்டலி சம்பிக்க ரணவக்க, மனோ கணேசன், றிஷாட் பதியூதீன், ரவூப் ஹக்கீம், பழனி திகாம்பர ஆகியோர் ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் தெரிவித்தனர் எனவும் ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.