ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளர் நாளை அறிவிக்கப்படலாம்..?

Report Print Jeslin Jeslin in அரசியல்

நாளை அல்லது இவ்வார இறுதியில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்க எதிர்பார்ப்பதாக அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.

இலங்கை தேயிலை சபையில் இன்றையதினம் இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின்போது அவர் இதனை வெளியிட்டுள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் யார் என்பதை இவ்வார இறுதியில் கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் ஒருமித்து அறிவிப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம்.

ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராகக் களமிறங்க வேண்டும் என்று எம்முடைய கட்சியில் பலர் விரும்புகின்றார்கள். எனினும் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவே முன்னணியில் இருக்கின்றார். இவ்விடயத்தில் கட்சி சரியான தீர்மானமொன்றை மேற்கொள்ளும் என்ற நம்பிக்கை உள்ளது.

எனவே நாளை அல்லது இவ்வார இறுதியில் எம்மால் இதுகுறித்த ஒரு தீர்மானத்திற்கு வரமுடியும் என்று எதிர்பார்க்கிறோம். அதேபோன்று ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த அனைவரும் ஒன்றிணைந்து எமது வேட்பாளரைப் பெயரிடுவோம் என்றும் நம்புகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers