ஐ.தே.கவின் வேட்பாளர் நாடாளுமன்றில் இன்று அறிவிக்கப்பட்டார்..?

Report Print Jeslin Jeslin in அரசியல்

சபாநாயகர் கரு ஜயசூரியவே ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் என நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எனினும், சபாநாயகர் தொடர்பில் இவ்வாறு சபையில் தெரிவிக்கப்படும்போது சபாநாயர் கரு ஜயசூரிய எவ்வித மறுப்பும் வெளியிடாமல் சிரித்துக் கொண்டு சபை நடவடிக்கைகளை முன்கொண்டு சென்றதாக தெரியவருகின்றது.