தாமரை கோபுரம் நிதி மோசடி - கட்சி பேதமின்றி விசாரணை

Report Print Steephen Steephen in அரசியல்

கொழும்பு தாமரை கோபுரத்தை நிர்மாணிப்பதில் நடந்ததாக கூறப்படும் நிதி மோசடி சம்பந்தமாக கோப் குழு கட்சி பேதமின்றி விசாரணை நடத்தும் என அந்த குழுவின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினரான சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற கோப் குழுவின் கூட்டத்தில் கலந்துக்கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு 6 மாதம் 23 ஆம் திகதி தொலைத் தொடர்புகளை ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழுவை அழைத்து இது சம்பந்தமாக கலந்துரையாடினோம்.

தாமரை கோபுரம் நிர்மாணிப்பு தொடர்பாக நீண்ட விரிவான அறிக்கை ஒன்றை கணக்காய்வாளர் கடந்த ஏப்ரல் முதலாம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்பித்துள்ளார்.

இந்த இரண்டு அறிக்கைகளிலும் விரிவான விடயங்கள் உள்ளன. மிக விரைவில் தொலைத் தொடர்புகளை ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழு அழைத்து விசாரணை நடத்த எதிர்பார்த்துள்ளோம்.

பக்கசார்பற்ற விசாரணை நடத்தி, இதில் நடந்துள்ள நிதி குறைப்பாடுகள், முறைகேடுகள் மற்றும் மோசடி நடந்திருந்தால், அது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்படும் எனவும் சுனில் ஹந்துன்நெத்தி குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers