நிறைவேற்று அதிகாரம் ஒழிக்கப்படுவதை எதிர்க்கும் அரசியல் கட்சியினர்

Report Print Steephen Steephen in அரசியல்

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவி ஒழிக்கப்படுவதை ஐக்கிய தேசியக் கட்சியின் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பதாக தெரியவருகிறது.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பது தொடர்பாக இலங்கையின் உயர் மட்ட அரசியல் பதவிகளை வகிப்போர் கவனம் செலுத்தியுள்ளனர்.

எனினும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை ஒழிப்பதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் தேவை.

இந்த நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமல்லாது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து நிறைவேற்று அதிகாரம் ஒழிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான நிலைமையில் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற உறுப்பினர்களின் ஆதரவை பெறுவது சிரமமான காரியம் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சியை முறையை ஒழிக்க மைத்திரி, ரணில் மற்றும் மகிந்த தரப்பில் அவசர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.