மகிந்தவால் இலங்கை அரசியல்வாதிகளுக்கு வைக்கப்பட்டுள்ள செக்

Report Print Jeslin Jeslin in அரசியல்

ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் வரை அரசியல்வாதிகளின் சில செயற்பாடுகளுக்கு தடை விதிக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று இன்றையதினம் வெளியிடப்படவுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது.

வர்த்தமானி அறிவித்தலின்படி. இடமாற்றங்கள், பதவி உயர்வுகள், அரச நிறுவனங்களுக்கான புதிய நியமனங்களுக்கு தடைவிதிக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

எனினும், மருத்துவர்கள், ஆசிரியர்கள் போன்ற குறிப்பிட்ட முக்கியமான நியமனங்களை மேற்கொள்ள முடியும் எனினும் அவ்வாறான நிகழ்வுகளுக்க குறித்த அமைச்சுக்களின் செயலாளர்களே தலைமை தாங்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அரசியல் செயற்பாடுகளுக்கு அரசாங்க சொத்துக்களை பயன்படுத்துவதை தடுப்பதற்கான உத்தரவும், இந்த வர்த்தமானியில் இடம்பெறும் என்றும் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.