பொதுஜன பெரமுனவில் இணைந்த முன்னாள் வடக்கு ஆளுநர்

Report Print Steephen Steephen in அரசியல்

வடக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ரெஜினோல்ட் குரே, இன்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்துக்கொண்டதுடன் அங்கத்துவத்தை பெற்றுக்கொண்டார்.

பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவிடம் அவர் கட்சியின் அங்கத்துவ அட்டையை பெற்றுக்கொண்டுள்ளார்.

இந்த நிகழ்வில் களுத்துறை மாவட்ட சமய தலைவர்கள், அரசியல் தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்களும் கலந்துக்கொண்டனர்.

ரெஜினோல்ட் குரே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவின் வெற்றிக்காக வடக்கு மாகாணத்தின் அனைத்து ஒருங்கிணைப்பு பணிகளுக்கும் பொறுப்பாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

Latest Offers