றிஷாட் பதியூதீன் துருக்கி பயங்கரவாதிகளை பாதுகாத்து வருகிறார்: எஸ்.பி.திசாநாயக்க

Report Print Steephen Steephen in அரசியல்

அமைச்சர் றிஷாட் பதியூதீன் துருக்கி பயங்கரவாதிகளை இலங்கைக்கு வரவழைத்து அவர்களை பாதுகாப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மேலும் அவர்,

அமைச்சர் றிஷாட் பதியூதீனுக்கு எதிராக அரசாங்கம் சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். றிஷாட் பதியூதீனின் சகோதரரை கைது செய்யவும் சாட்சியங்கள் உள்ளன.

மோசடியாக கொள்வனவு செய்யப்பட்ட 6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் ஏக்கர் காணிகள் தொடர்பான 69 உறுதிப்பத்திரங்களை இலஞ்ச ஆணைக்குழுவுக்கும் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கும் வழங்கியுள்ளேன்.

சஹ்ரான் உட்பட அடிப்படைவாதிகளையும், துருக்கி பயங்கரவாதிகளையும் இலங்கை வரவழைத்து பாதுகாப்பு வழங்கி அவர்களிடம் நிதியையும் சிறப்புரிமைகளையும் பெற்றுக்கொண்டார். அதற்கான போதுமான சாட்சியங்கள் உள்ளன. இது குறித்து தூதுவருக்கும் வெளிவிவகார அமைச்சிடமும் முறைப்பாடு செய்துள்ளேன்.

சதோச வாகனங்கள் அடிப்படைவாதிகள் பயன்படுத்த வழங்கப்பட்ட சம்பந்தமான சாட்சியங்களும் சமர்பிக்கப்பட்டுள்ளன. எனினும், இந்த குற்றச்சாட்டுக்கள் அனைத்திலும் இருந்து றிஷாட் பதியூதீன் தப்பியுள்ளார்.

பொய்யான பெயர்களை வழங்கி சதோச நிறுவனத்தில் ஊதியம் பெற்றுக்கொள்கிறார். றிஸ்மி றிஷாட் என்ற ஆலோசகருக்கு 27 இலட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது.

மூன்று இடங்களில் 27 இலட்சம் ரூபாய் செலுத்தப்படுகிறது. பொலிஸாரின் உதவியும் றிஷாட்டுக்கு உள்ளது. பணத்தை கொடுத்து அவர்களை வாங்கியுள்ளார் எனவும் எஸ்.பி.திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.