ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணத்தை செலுத்திய பெண்

Report Print Steephen Steephen in அரசியல்

இலங்கை சோசலிசக் கட்சியின் சார்பில் அஜந்தா விஜேசிங்க பெரேரா, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று முதல் எதிர்வரும் 6ஆம் திகதி வரை கட்டுப்பணத்தை செலுத்தலாம்.

சுயேட்சை வேட்பாளர்கள் 75ஆயிரம் ரூபாயும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் வேட்பாளர் 50ஆயிரம் ரூபாயையும் கட்டுப் பணமாக செலுத்த வேண்டும்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அல்லது தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்கும் நபரே ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட முடியும்.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் 7ஆம் திகதி பெற்றுக்கொள்ளப்படும என்பதுடன் தேர்தல் நவம்பர் மாதம் 16ஆம் திகதி நடைபெறவுள்ளது.