சஜித்திற்கு சாதகமாக மாறிய சூழ்நிலைகள்! வேட்பாளராக களத்தில் குதிப்பாரா

Report Print Jeslin Jeslin in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாசவை நியமிப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுவதாக தெரியவருகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் தற்போதுள்ள 30 உறுப்பினர்களில் 21 பேரின் ஆதரவு அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கே உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

குறித்த 21 பேரும் அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்து கையொப்பமிட்ட ஆவணம் ஒன்றை அமைச்சர் மங்கள சமரவீரவிடம் ஒப்படைத்துள்ளதாக தெரியவருகின்றது.

இன்றையதினம் இடம்பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு தெரிவிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பங்காளிக் கட்சிகள் உறுதியளித்துள்ளன.

அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதமர் ரணில் விக்ரமசிங்க சார்பான ஒருவருக்கு ஆதரவு வழங்குவதில் விடாப்பிடியாக உள்ளது.

ஒட்டுமொத்தத்தில் கடும் இறுக்கமான ஒரு நிலைக்கு தள்ளப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்க அமைச்சர் சஜித் பிரேமதாசவை வேட்பாளராக நியமிக்கும் வாய்ப்புக்கள் அதிகம் என அரசியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே தனக்கு சாதகமான சூழலை உருவாக்கிக் கொள்ளவே தற்போது ஐக்கிய தேசியக் கட்சி நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கான யோசனையை முன்வைத்து அமைச்சரவை சந்திப்புக்களை நடத்தி அதிலும் ஒரு சாதகமான முடிவை எட்ட முடியாத நிலைக்கு வந்துள்ளது.

எது எவ்வாறாயினும் ஜனாதிபதி வேட்பாளர் விடயத்தில் ஐக்கிய தேசியக் கட்சி குழப்பத்தில் இருக்கின்றதோ இல்லையோ தான் வேட்பாளராக களமிறங்குவதில் அமைச்சர் சஜித் தெளிவான நிலைப்பாட்டில் இருக்கின்றார்.