நாமலின் திருமணத்தில் மகிந்தவை இரகசியமாகச் சந்தித்த வெளிநாட்டு இராஜதந்திரிகள்

Report Print Jeslin Jeslin in அரசியல்

எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவின் திருமணம் அண்மையில் இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில், நேற்றையதினம் அவரது திருமண வரவேற்பு நிகழ்வு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட இராஜதந்திரிகளின் பங்கேற்புடன் மிக விமரிசையாக இடம்பெற்றிருந்தது.

இதன்போது இந்திய அரசியல்வாதிகளான சுப்ரமணியன் சுவாமி மற்றும் தேவகௌடா உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது வரவேற்பிற்கு வருகைத்தந்த முக்கியஸ்தர்கள் அனைவரிற்கும், தந்தை மேலே இருக்கின்றார் அங்கு சென்று அவரை பாருங்கள் என நாமல் ராஜபக்ச அறிவித்துள்ளார்.

நாமலின் திருமணத்தன்றே சற்று சுகயீனத்தை எதிர்நோக்கியிருந்த மகிந்த ராஜபக்சவிற்கு நேற்றையதினம் அதிக உடல் நலக்குறைவு ஏற்பட்டதா, அல்லது ஏன் அனைவரும் அவரை தனியே சென்று சந்தித்தனர், அதற்கான காரணம் என்ன என்ற கேள்வி எழுகின்றது. எனினும் இதுவரையில் எவ்வித தகவல்களும் வெளிவரவில்லை.

பல வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கும் மகிந்தவுக்கும் இடையில் இரகசிய சந்திப்புக்கள் இடம்பெற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.