நிறைவேற்று அதிகாரம் ரத்து செய்யப்படுவதனை எதிர்க்கின்றோம்: சஜித் தரப்பு

Report Print Kamel Kamel in அரசியல்

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ரத்து செய்யப்படுவதனை தாம் எதிர்ப்பதாக அமைச்சர் சஜித் பிரேமதாச தரப்பு, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அறிவித்துள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ரத்து செய்யும் எந்தவொரு யோசனையையும் எதிர்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

20ம் திருத்தச் சட்டம் தொடர்பில் இன்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டுள்ளன.

நிறைவேற்று அதிகாரத்தை ரத்து செய்ய வேண்டுமாயின் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக நியமித்து வெற்றியீட்டியதன் பின்னர் அது குறித்து கவனம் செலுத்த முடியும் என அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் கோரும் தலைவர் சஜித் பிரேமதாசவை தேர்தல் களத்தில் இறக்கி அவரை வெற்றிபெறச் செய்வதே சாலச் சிறந்தது என சஜித் தரப்பு தெரிவித்துள்ளது.

தற்பொழுது 20ம் திருத்தச் சட்டம் பற்றி பேசுவதில் பயனில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

Latest Offers