எனது பட்டியலில் புலிகளின் தலைவர் பிரபாகரனே முதலிடம்! இந்திய அரசியல்வாதி

Report Print Jeslin Jeslin in அரசியல்

தமிழீழ விடுதலைப் புலிகளின் பட்டியலில் நானிருந்தேன். ஆனால் என்னுடைய பட்டியலில் முதலில் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பெயரே இருந்தது. இறுதியில் என்ன நடந்தது என்பது உங்களுக்குத் தெரியும் என பாரதிய ஜனதா கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ரணில், சிறிசேன அரசாங்கம் அமெரிக்காவின் கைக்கூலி, விடுதலைப் புலிகளுக்கு எதிரானவனாகவே என்னைப் பார்த்தனர். இன்னும் பார்க்கின்றனர்.

புலிகளின் எதிரியான நீங்கள் மகிந்தவின் ஆதரவாளர் அப்படியா..?

இல்லை, இல்லை. நான் புலிகளுக்கு எதிரானவன். மகிந்தவை விரும்புகின்றேன். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்தவின் சகோதரர் கோத்தபாய ராஜபக்சவே வெற்றியீட்டுவார்.

புலிகளின் எதிரியான உங்களின் பெயர்தான், புலிகளின் பட்டியலில் இருந்ததாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவுநர் வைகோ தெரிவித்திருந்தாரே...?

கறுப்புச் சால்வை அணிந்திருக்கும் வைகோ, என்னை எச்சரித்திருந்தார். நான் ஒன்றைக் கூறினேன். புலிகளிடம் சிவப்பு பட்டியல் இருக்குமாயின் என்னிடமும் அந்தப் பட்டியல் இருக்கின்றது.

புலிகளின் பட்டியலில் நானிருந்தேன். ஆனால் என்னுடைய பட்டியலில் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பெயரே முதலில் இருந்தது. இறுதியில் என்ன நடந்ததென்பது என்று உங்களுக்கு தெரியும் என குறிப்பிட்டுள்ளார்.

You My Like this video