சஹ்ரான் தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கு தெரியும்! ஆனால் எனக்கு தெரியாது என்கிறார் மைத்திரி

Report Print Jeslin Jeslin in அரசியல்

ஈஸ்டர் தாக்குதலை நடத்திய சஹ்ரான் குறித்தும் இவ்வாறான ஒரு தாக்குதல் திட்டம் இருப்பது தெரிந்தும் பொலிஸ்மா அதிபரோ பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவோ என்னிடம் எதனையும் தெரிவிக்கவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற ஈஸ்டர் தின குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரிக்கும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் முன்னிலையில் சாட்சியம் அளிக்கும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும், அநாவசியமான விடயங்கள் குறித்து என்னிடம் பேசிய நபர்கள் அவசியமான விடயத்தை மறைத்துள்ளனர் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

Latest Offers