தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளித்தார் மைத்திரி! ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு

Report Print Rakesh in அரசியல்

உயிர்த்த ஞாயிறு தினமன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஆராயும் விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் உறுப்பினர்கள் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்தனர் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தெரிவுக்குழுவினால் தமது கருத்துக்கள் மற்றும் முன்மொழிகளைப் பெற்றுக்கொள்வதற்காக முன்வைக்கப்பட்ட கோரிக்கையைக் கவனத்தில்கொண்ட ஜனாதிபதி, ஜனநாயகத்தை மதிக்கும் தலைவர் என்ற வகையில் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுடன் இந்தச் சந்திப்புக்கு இணக்கம் தெரிவித்திருந்தார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று தெரிவுக்குழு முன்னிலையில் மைத்திரி சாட்சியமளிக்கும் போது ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

உயிர்த்த ஞாயிறு தினமன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியிலேயே தெரிவுக்குழு முன்னிலையில் ஜனாதிபதி சாட்சியமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.