ஹக்கீமை கடுமையாக விமர்சனம் செய்த ராஜித

Report Print Kamel Kamel in அரசியல்

அமைச்சர் ரவூப் ஹக்கீமை அமைச்சர் ராஜித சேனாரட்ன கடுமையாக விமர்சனம் செய்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்வது குறித்து நடைபெற்ற முன்கூட்டிய அமைச்சரவைக் கூட்டத்தின் போது ராஜித இவ்வாறு விமர்சனம் செய்துள்ளதாக தெரியவருகிறது.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ரத்து செய்யப்படக் கூடாது என்ற தொனியில் ரவூப் ஹக்கீம் கருத்து வெளியிட்டுள்ளார்.

இதன்போது “உங்களுக்கு ஆரம்பம் மறந்துவிட்டது” என ராஜித குற்றம் சுமத்தியுள்ளார்.

2015ஆம் ஆண்டில் நிறைவேற்று அதிகாரத்தை ரத்து செய்வதாக வாக்குறுதி அளித்த காரணத்தினாலேயே இந்த பதவிகளை வகிப்பதாகவும் இந்த வாக்குறுதி தொடர்பிலான தார்மீக பொறுப்பு உங்களுக்கும் உண்டு எனவும் ராஜித தெரிவித்துள்ளார்.

“இன்று அது எதனையும் கருத்திற் கொள்ளாது நிறைவேற்று அதிகாரத்தை ரத்து செய்வதற்கு எதிராக குரல் கொடுப்பதாகவும், நீங்கள் எல்லாம் கடுமையான சந்தர்ப்பவாதி” எனவும் ராஜித, ஹக்கீமை திட்டியுள்ளார்.

அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னரும் ஹக்கீம், பிரதமருக்கு எதிராக கருத்து வெளியிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து கட்சியிலும் இந்த விவகாரம் தெடர்பில் சர்ச்சை நிலைமை ஏற்பட்டதனால், தவறுதலாக நிறைவேற்று அதிகாரத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்து விட்டதாக ஹக்கீம் தெரிவித்துள்ளார் என சிங்கள ஊடகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து பிரதமரிடம் மன்னிப்பு கோரவும் தயார் என ஹக்கீம் கூறியதாக மேலும் குறிப்பிட்டுள்ளது.

Latest Offers