ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு குறித்து ஐ.தே.க செயற்குழுவில் ஆராய்வு

Report Print Aasim in அரசியல்

ஐ.தே.கவின் தலைமையில் உருவாக்கப்படவுள்ள ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு தொடர்பிலான இறுதி தீர்மானம் ஐ.தே.கவின் செயற்குழுவில் மேற்கொள்ளப்படவுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் பல்வேறு கட்சிகளை இணைத்து ஐக்கிய தேசிய முன்னணி என்ற பெயரில் கூட்டணியொன்றை உருவாக்கி ஜனாதிபதித் தேர்தல் உள்ளிட்ட முக்கிய தேர்தல்களில் போட்டியிடுவது தொடர்பான கலந்துரையாடல்கள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே கட்சியின் சார்பில் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் களமிறக்கப்பட வேண்டும் என்று ஒரு தரப்பினரும், கரு ஜயசூரியவுக்கு ஆதரவாக இன்னொரு தரப்பினரும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

எனினும் கட்சியின் இறுதித்தீர்மானம் இதுவரை அறிவிக்கப்படாத நிலை கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் ஒரு மந்த நிலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு தொடர்பான இறுதித் தீர்மானத்தை கட்சியின் செயற்குழுவைக் கூட்டி மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு எதிர்வரும் 25ஆம் திகதி கூடவுள்ளது.

அன்றைய தினம் பெரும்பாலும் இரகசிய வாக்கெடுப்பின் மூலம் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு செய்யப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Latest Offers

loading...