தாமரை கோபுர நிர்மாணத்தில் 2 பில்லியன் ரூபா முறைக்கேடு: குற்றச்சாட்டை மறுத்துள்ள சீனா

Report Print Ajith Ajith in அரசியல்

தென்னாசியாவின் அதி உயரமான தாமரை கோபுர நிர்மாணிப்பின் போது 2 பில்லியன் ரூபா முறைக்கேடாக பயன்படுத்தப்பட்டதாக இலங்கை ஜனாதிபதி வெளியிட்ட குற்றச்சாட்டை சீனாவின் அரச நிர்மாண நிறுவனமான ஏஎல்ஐடி மறுத்துள்ளது.

கடந்த திங்கட்கிழமையன்று 356 மீற்றர் உயரமான தாமரை கோபுரத்தை திறந்து வைத்த ஜனாதிபதி, நிர்மாணத்தின் போது 2 பில்லியன் ரூபா முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட உள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியிருந்தார்.

ஏஎல்ஐடி நிர்மாணித்த இந்த கோபுரத்துக்கான நிதியில் 80 வீதத்தை சீனாவின் எக்சிம் வங்கி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...