நல்லதை செய்வதற்கு கெட்ட நேரத்தை பார்க்க தேவையில்லை! சுமந்திரன்

Report Print Ajith Ajith in அரசியல்

நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்கும் வகையிலான அவசர அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் இணக்கத்துடனேயே கூட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே 2015ஆம் ஆண்டு தேர்தலின்போது நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்காகவே வாக்குகள் கேட்கப்பட்டன. அது கிடைத்தபோதும் இதுவரை நிறைவேற்று அதிகாரம் ஒழிக்கப்படவில்லை.

இந்தநிலையில் இந்த முயற்சி கடந்த வியாழக்கிழமையன்று அமைச்சரவைக் கூட்டத்தில் தோற்றுப்போயுள்ளது. 20ஆவது திருத்தத்தை கொண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனினும் ஜனாதிபதி தேர்தல் ஒன்று நடத்தப்படவுள்ள நிலையில் ஜே.வி.பி ஏற்கனவே சமர்ப்பித்துள்ள இந்த யோசனையை நிறைவேற்றுவது, ஜனாதிபதி தேர்தல் களத்தில் உள்ளவர்களை இலக்கு வைத்த நடவடிக்கை என்ற வகையில் சிறுபான்மைக் கட்சிகள் அதற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.

எனினும் நல்லதை செய்வதற்கு கெட்ட நேரத்தை பார்க்க தேவையில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Latest Offers

loading...