பின்கதவால் வருவதற்கு சதி வலை பின்னும் ரணில்!

Report Print Jeslin Jeslin in அரசியல்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மீ்ண்டும் பின்கதவால் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள முயற்சிக்கின்றார் என மத்திய மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னக்கோன் குற்றம் சுமத்தியுள்ளார்.

கண்டியில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி தேர்தல்கள் வரும்போது கடந்த 18 வருடங்களாக ஐ.தே.க முகம்கொடுத்து வந்த சிக்கலுக்கு மீண்டும் முகம் கொடுக்க நேரிட்டுள்ளது.

தங்களது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்வதில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை மறைப்பதற்கான நடவடிக்கைகளையே மேற்கொண்டு வருகின்றது.

அது மாத்திரமன்றி தேர்தலுக்கு பயந்தே, ஜனாதிபதித் தேர்தல் முறைமையை ஒழிப்பது குறித்து தற்போது பேசுகின்றது.

இவ்வாறு ஐ.தே.கவின் தலைமை தனது இயலாமையை மறைத்துகொள்ள பல்​வேறு சூழ்ச்சிகரமான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றது.

கடந்த 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பின்கதவில் வந்தமையை போன்றே தற்போதும் வருவதற்கு பிரதமர் ரணில் முயற்சி செய்கின்றார் என குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers