ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய மீது எழுந்துள்ள புது சர்ச்சை..!

Report Print Jeslin Jeslin in அரசியல்

இலங்கை ஆட்பதிவு திணைக்களம் செல்லுபடியற்றது என அறிவித்த தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்தி பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச வாக்காளர் பதிவில் தனது பெயரை பதிவு செய்துள்ளார் என கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

2017, 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளுக்கான வாக்காளர் பதிவில் இவ்வாறு முறைகேடான வகையில் அவரது பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

கோட்டை தேர்தல் தொகுதியில் உள்ள கங்கொடவில தெற்கு 526 ஏ கிராம சேவையாளர் பிரிவில் கோத்தபாய ராஜபக்ச தன்னை பதிவு செய்துள்ளார் என குறிப்பிடப்படுகின்றது.

சமீபத்திலும் குறிப்பிட்ட முகவரியிலிருந்து தன்னை பதிவு செய்வதற்காக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் குறிப்பிட்ட அடையாள அட்டையை பயன்படுத்தியுள்ளார் என அந்த செய்தியில் தெரிவிக்கப்படுகின்றது.