அணி மாறல் ஆரம்பம்! ஐ.தே.கட்சியில் இணைந்த சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்

Report Print Steephen Steephen in அரசியல்

கடுவலை மாநகரசபையின் முன்னாள் மேயரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினருமான ஜீ.எச்.புத்ததாச ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளார்.

அவர் அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

புத்ததாச ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாக்கும் அமைப்பு என்ற அமைப்பை ஆரம்பித்து செயற்பட்டு வந்தார்.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்தமைக்கு கடும் எதிர்ப்புகளை வெளியிட்டு வந்துடன் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் ஆதரவுடன் அந்த அமைப்பை ஆரம்பித்திருந்தார்.

Latest Offers

loading...