ஜே.வி.பி இன்றி நாட்டின் எதிர்காலம் உருவாகாது: பிமல் ரத்நாயக்க

Report Print Steephen Steephen in அரசியல்

மக்கள் விடுதலை முன்னணியின் உதவி இல்லாமல் நாட்டின் எதிர்காலம் உருவாகாது என அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தி கொழும்பில் ஒழுங்கு செய்திருந்த கருத்தரங்கொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

கோத்தபாய அந்த காலத்தில் பாதுகாப்புச் செயலாளர் அல்ல உப ஜனாதிபதி. உப ஜனாதிபதியாக அவரிடம் இருந்து 20 ஆயிரம் புலனாய்வாளர்களுக்கு மைத்திரி வெற்றி பெறுவார் என்பதை கண்டறிய முடியாமல் போனது.

மைத்திரிபால வெற்ற வாக்குகளில் 30 லட்சம் வாக்குகள் ஐக்கிய தேசியக் கட்சியின் வாக்குகள். 5 லட்சம் வாக்குகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்குகளாக இருக்கலாம். முஸ்லிம் காங்கிரஸ் காரணமாக குறைந்தது 2 லட்சம் வாக்குகளாவது கிடைத்திருக்கும்.

நாங்கள் வேட்பாளரை நிறுத்தவில்லை என்பதால், அதன் சாதகம் கட்டாயம் மைத்திரிபாலவுக்கு கிடைத்திருக்கும். நடு நிலையான வாக்குகள் இன்றி வெற்றி பெறுவது என்பதை எண்ணிப் பார்க்கவும் முடியாது.

மக்கள் விடுதலை முன்னணி, அனுரகுமார, ஹந்துநெத்தி ஆகியோரின் உதவியின்றி 10 வருடங்கள் நாட்டை முன்னேற்ற முடியாது எனவும் பிமல் ரத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers

loading...