செயற்குழுவிற்கு இரகசியமாக உறுப்பினர்களை நியமிக்கும் ரணில்

Report Print Steephen Steephen in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவிற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவான உறுப்பினர்களை நியமிக்கும் நடவடிக்கை தற்போது கொழும்பில் முன்னெடுக்கப்படுவதாக அந்த கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் செயற்குழு உறுப்பினர்களுக்கு நியமனங்களை வழங்க தேவையான நடவடிக்கைகள் தயார்ப்படுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹேசா விதானகே கூறியுள்ளனர்.

ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்ய உள்ள நிலையில், செயற்குழுவிற்கு புதிய உறுப்பினர்களை நியமிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத நடவடிக்கை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறிகொத்தவில் உறுப்பினர்களை நியமிக்கும் ஆவணங்கள் தயார்ப்படுத்தப்பட்டு, அவை அலரி மாளிகைககு கொண்டு வரப்பட்டு இரகசியமான முறையில் நியமனங்களை வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரை ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு தெரிவு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.

ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களே ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்ய வேண்டும் எனவும் அந்த கட்சி கூறியுள்ளது.

Latest Offers

loading...