சஜித் அணியில் இருந்து ரணில் அணிக்கு தாவிய முக்கிய அமைச்சர்

Report Print Steephen Steephen in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சியின் சஜித் அணியின் முக்கியஸ்தர் அமைச்சர் மலிக் சமரவிக்ரம, தனது போராட்டத்தை கைவிட்டு மீண்டும் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் அணியில் இணைய தயாராகி வருவதாக தெரியவருகிறது.

நேற்று முன்தினம் நடைபெற்ற ஏற்றுமதியாளர்களுக்காக விருது வழங்கும் விழாவில் கலந்துக்கொண்ட சில வர்த்தகர்கள் அரசியல் நிலைமைகள் குறித்து மலிக் சமரவிக்ரமவிடம் விசாரித்துள்ளனர்.

“ அது நடக்கும் வேலையல்ல. தேசிய அரசியலில் அரசியல் சிறுப்பிள்ளைகளுடன் எதனையும் செய்ய முடியாது. ரணிலின் அரசியலுக்கும் சஜித்தின் அரசியலுக்கும் பெரிய வேறுபாடு உள்ளது என்பதை நான் தற்போது புரிந்துக்கொண்டேன்” எனக் கூறியுள்ளார்.

மலிக் சமரவிக்ரமவின் இந்த பேச்சின் மூலம் அவரை சஜித் அணியை கைவிட்டு ரணிலுடன் இணைவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனடிப்படையில் சஜித் அணியில் இருந்த முக்கிய அரசியல் தூண்களின் எண்ணிக்கை நான்கில் இருந்து மூன்றாக குறைந்துள்ளது.

இதனிடையே அமைச்சர் மலிக் சமரவிக்ரம, தற்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் கண்டிக்கு புறப்பட்டுச் சென்றுள்ளதாக தெரியவருகிறது.

அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவை சந்தித்து விசேட பேச்சுவார்த்தை ஒன்றை நடத்த அவர்கள் இருவரும் அவசரமாக கண்டிக்கு செல்லதாக கூறப்படுகிறது.

இந்த பேச்சுவார்த்தையின் பின்னர், கண்டி வட்டபுளுவில் உள்ள மலிக் சமரவிக்ரமவின் வீட்டில் ரணில் இராபோசன விருந்தில் கலந்துக்கொள்ள உள்ளதாகவும் தெரியவருகிறது.