கோத்தபாயவை கொலை செய்ய திட்டம்: வீரவங்ச

Report Print Steephen Steephen in அரசியல்

அரசாங்கத்தின் அரசியல் வேட்டைக்கு உதவியதனார் என்ற குற்றச்சாட்டை எதிர்நோக்கும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சொலிசிட்டர் ஜெனரல் தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்கவை உடனடியாக பதவியில் இருந்து விலக வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

கோத்தபாய ராஜபக்சவை கைது செய்து, அவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதை தடுக்க அரசாங்கம் எடுத்த முயற்சி தோல்வியடைந்தாலும் அவரை கொலை செய்யும் திட்டம் இருப்பதாக தெரியவருகிறது.

நாம் அறிந்த வகையில் நாடாளுமன்றம் சட்டத்தை உருவாக்குகிறது. சட்டத்தை உருவாக்கவும் முடியும் மீறவும் முடியும் என தில்ருக்ஷி கூறுகிறார். இப்படித்தான் அரசாங்கத்தின் அரசியல் பழிவாங்கல்கள் நடந்தன.

இதற்கு சிகப்பு யானை குட்டி உள்பந்தம் பிடித்தது. இவர்கள் அமைத்த மைதானத்தை அடிப்படையாக கொண்டே ரணில் விக்ரமசிங்க, தில்ருக்ஷியை பயன்படுத்தி வழக்குகளை தொடர முடிந்தது.

இறுதியில் வழக்கு தள்ளுபடியாகி விட்டது, அவன்கார்ட் நிறுவனத்திற்கு ஏற்பட வேண்டிய சேதம் ஏற்பட்டு விட்டது. ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பட்டினியில். அதனை போக்க முடியாது.

புலனாய்வு பிரிவு பொலிஸார் தற்போது கோத்தபாயவை கைது செய்ய அனுமதி கோருகின்றனர். பொய் குற்றச்சாட்டில் கோத்தபாய ராஜபக்ச பிடித்து சிறையில் அடைக்க பார்க்கின்றனர்.

தற்போது வாக்குகளை உடைக்க முன்னாள் இராணுவ தளபதி மஹேஷ் சேனாநாயக்க பயன்படுத்தி வருகின்றனர்.

சிலரை தேர்தலில் நிறுத்தி சிங்கள வாக்குகளை சிதறடித்து, மீண்டும் வெள்ளைகாரர்களுக்கு சார்பான ஆட்சியை கொண்டு வர முயற்சித்து வருகின்றனர் எனவும் விமல் வீரவங்ச குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers

loading...