ஜனாதிபதி முறைமையை மாற்றுவதற்கு அமைச்சர் திகாம்பரம் எதிர்ப்பு

Report Print Thirumal Thirumal in அரசியல்

அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை மாற்றுவதற்கு நாங்கள் எதிர்க்கும் அதேவேளை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெரும் வேட்பாளரை நிறுத்த வேண்டும் என பிரதமரிடம் நானும் எமது மக்களும் வேண்டுகோள் விடுக்கின்றோம்.இந்த பயணத்தில் பிரதமரும் இருக்க வேண்டும் என மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

ஹட்டன் டி.கே.டபிள்யூ கலாசார மண்டபத்தில் 483 பயனாளிகளுக்கு காணி உறுதி பத்திரம் வழங்கி வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந் நிகழ்வில் மலையக மக்கள் முன்னணியில் தலைவரும், விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வே.இராதாகிருஸ்ணன், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான எம்.உதயகுமார், எம் ராம், சோ.ஸ்ரீதரன், மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் அ.லோரன்ஸ், பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

இந்த கலாசார மண்டபத்தில் கடந்த காலத்தில் இருந்த தலைவர்கள் பஜனையும், கோழி குஞ்சுகளையுமே கொடுத்தார்கள். ஆனால் தமிழ் முற்போக்கு கூட்டணியாக நானும், மனோவும், ராதாவும் ஒற்றுமையாக நான்கு வருடங்கள் பயணித்தமையினாலே இன்று காணி உறுதிப்பத்திரத்தை வழங்குகின்றோம்.

காணி உறுதிபத்திரம் வழங்கினால் தோட்டத்திலுள்ளவர்கள் விற்று விடுவார்கள். அதனால் தான் நாங்கள் அதனை பெற்றுக்கொடுக்கவில்லை என கடந்த கால தலைவர்கள் கூறுகின்றார்கள். ஆனால் அப்படி அல்ல இப்போது ஒவ்வொரு வீட்டிலும் படித்தவர்கள் சிந்திக்ககூடியவர்கள் உருவாகி விட்டார்கள்.

தொழிலாளியாக இந்த மண்டபத்திற்கு வந்த நீங்கள் ஒவ்வொருவரும் காணி உறுதிபத்திரத்துடன் இலட்சாதிபதியாக வீடு செல்ல போகின்றீர்கள்.

உரிமை அரசியல் என்பது இது தான் காணி உரிமையுடன் தனி வீடு, பிரதேச சபை அதிகரிப்பு, பிரதேச சபை சட்டத்திருத்தம், அதிகாரசபை உருவாக்கம் என்பன பெற்றுக்கொடுத்துள்ளோம்.

மேலும் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெரும் வேட்பாளரை களம் இறக்க வேண்டுமென பிரதரிடம் கேட்டுகொள்ளும் அதேவேளை மலையக அபிவிருத்திக்கு பிரதமரின் பங்களிப்பு அளப்பரியது என்றார்.

Latest Offers