ரணில் தனது வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்! சஜித் தரப்பு கோரிக்கை

Report Print Murali Murali in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் மற்றும் பொது செயலாளர் ஆகியோர் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என அமைச்சர் அஜித் பி.பெரேரா தெரிவித்துள்ளார்.

நிதியமைச்சர் மங்கள சமரவீரவின் இல்லத்தில் உள்ள உத்தியோகப்பூர்வ அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர்,

“ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு, நாடாளுமன்ற உறுப்பினர் குழு ஆகியவற்றின் ஊடாகவே தெரிவு செய்யப்படுவார் என்று கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பொதுச்செயலாளர் அகில விராஜ் காரியவசம் ஆகியோர் வாக்குறுதி வழங்கினர்.

இந்நிலையில், அதனை குறித்த இருவரும் நிறைவேற்ற வேண்டும். செயற்குழுவின் உறுப்பினர் எண்ணிக்கையினை அதிகரிக்க வேண்டும் என்று கட்சியின் தலைவர் தெரிவித்துள்ளார். எனினும், இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

எவ்வாறாயினும், அமைச்சர் சஜித்பிரேமதாச ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் என்று உத்தியோகப்பூர்வமாக அறிவிப்பது மாத்திரமே தற்போது மிகுதியாகவுள்ளது” என அவர் மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை, கட்சியை பாதுகாத்துக் கொண்டு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொது செயலாளரும், அமைச்சருமான அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்த ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். “நிச்சயமாக கட்சியில் பிளவு ஏற்படாமல் வெற்றியை நோக்கி செல்வதாகவும்” அவர் தெரிவித்துள்ளார்.

Latest Offers

loading...