அமைச்சரவை கூட்டத்தில் கடுமையாக அடிதடியில் ஈடுபட்ட இரு அமைச்சர்கள்!

Report Print Vethu Vethu in அரசியல்

கடந்த அமைச்சரவை கூட்டத்தின் போது இரு அமைச்சர்களுக்கு இடையில் அடிதடி நிலை ஏற்பட்டதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸவை களமிறங்க நடவடிக்கை மேற்கொண்டு வரும் இளம் அமைச்சர் ஒருவரினால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இரு அமைச்சர்களுக்கும் இடையிலான தாக்குதல் சம்பவத்தினால் அமைச்சரவை கூட்டத்தின் போது பரபரப்பு நிலை ஏற்பட்டது.

இருவரும் தகாத வார்த்தைகளை பிரயோகித்ததுடன் மோதலிலும் ஈடுபட்டதாக அமைச்சரவையில் கலந்து கொண்ட மற்றுமொரு அமைச்சர் தெரிவித்ததாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் சஜித் பிரேமதாஸ அணியின் சமூக வலைத்தள செயற்பாட்டாளர்கள், தாக்குதல் மேற்கொண்ட இளம் அமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்து வருவதாக குறிப்பிடப்படுகிறது.