உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் புதிய ஆணைக்குழு

Report Print Ajith Ajith in அரசியல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்ய புதிய ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தக் குழுவை நியமித்துள்ளதாக தெரிவிக்கும் வர்த்தமானி அறிவித்தல் நேற்று இரவு வெளியிடப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ஜனக் டி சில்வாவின் தலைமையில் ஐந்து பேரைக் கொண்டதாக இந்தக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை விசாரணை செய்ய நாடாளுமன்ற தெரிவுக்குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு முன்னால் கடந்த வாரம் ஜனாதிபதியும் சாட்சியமளித்திருந்தார்.

இந்த நிலையிலேயே அவர் புதிய ஆணைக்குழுவை அமைத்துள்ளார்.