கோத்தபாய மீது அவநம்பிக்கையில் இருக்கும் பொதுஜன பெரமுன

Report Print Steephen Steephen in அரசியல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச தொடர்பாக அந்த கட்சியினருக்குள்ளேயே அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் அஜித் பீ . பெரேரா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்தியுள்ளமை இந்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோத்தபாய ராஜபக்ச தனது அமெரிக்க குடியுரிமையை இரத்துச் செய்யும் விண்ணப்பத்தை கடந்த ஏப்ரல் மாதம் சமர்ப்பித்துள்ளார்.

அத்துடன் தனது குடியுரிமையை இரத்துச் செய்துக்கொண்டு விட்டமைக்கான ஆவணங்களை அவர் இதுவரை பகிரங்கமாக காண்பிக்கவில்லை.

அதேவேளை கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி முறைப்பாடுகளை செய்யவில்லை. இலஞ்ச ஆணைக்குழு மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் என்பன அவருக்கு எதிராக வழக்குகளை தொடர்ந்துள்ளன எனவும் அஜித் பீ. பெரேரா குறிப்பிட்டுள்ளார்.