அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சிகர செய்தி

Report Print Ajith Ajith in அரசியல்
2300Shares

அரச நிர்வாகத்துறை உட்பட்ட பல துறைகளின் வேதனங்கள் அதிகரிக்கப்படவுள்ளன.

நிதியமைச்சு இதற்கான நடவடிக்கையை எடுத்து வருகிறது.

இந்த வேதன உயர்வை வழங்குவதன் காரணமாக அரசாங்கத்துக்கு 200 பில்லியன் ரூபாய்கள் மேலதிக செலவு ஏற்படவுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த வேதன உயர்வு யோசனை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இதன்கீழ் வைத்தியர்கள், பொறியியலாளர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா பல்கலைக்கழக பணியாளர்கள் நன்மைப் பெறவுள்ளனர்.

அரசாங்கத்தின் நிறைவேற்று அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ளப்போவதாக எச்சரித்துள்ள நிலையிலேயே இந்த யோசனை முன்வைக்கப்படவுள்ளது.

தற்போது அரசாங்கம் அரச ஊழியர்களுக்கான வேதனம் மற்றும் ஓய்வூதியம் என்பவற்றுக்காக 735 பில்லியன் ரூபாய்களை செலவிடுகிறது.

புதிய யோசனையும் நிறைவேற்றப்பட்டால் அந்த செலவு 940 பில்லியன் ரூபாய்களாக உயர்வடையும்.

ஏற்கனவே நடைமுறையில் உள்ள வேதன முறைப்படி பல்கலைக்கழக கல்விசாரா பணியாளர்களின் ஆரம்ப வேதனம் 55959 ரூபா, மூன்றாம் நிலை நிர்வாக அதிகாரிகளின் ஆரம்ப வேதனம் 57536 ரூபா, காவல்துறையினருக்கு ஆரம்ப வேதனம் 60227 ரூபாவாகும்.


you may like this video