பரபரப்பாகும் அலரி மாளிகை! நாட்டு மக்களுக்கு முக்கிய தகவலை வெளியிடவுள்ள ரணில்

Report Print Vethu Vethu in அரசியல்

ஐக்கிய தேசிய கட்சிக்குள் முரண்பாடுகள் எழுந்துள்ள நிலையில் தீர்மானமிக்க முக்கிய அறிவிப்பு ஒன்றை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று வெளியிடவுள்ளார்.

கட்சியின் முக்கிய தலைவர்களுடான சந்திப்பு ஒன்று இன்று அலரி மாளிகையில் இடம்பெறவுள்ளது. இதனை பிரதமர் அலுவலகம் ஏற்பாடு செய்து வருகிறது.

இந்த சந்திப்பினை அடுத்து நாட்டுக்களுக்கு மக்களுக்கு விசேட அறிவிப்பு ஒன்றை பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெளியிடவுள்ளதாக தெரிய வருகிறது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மீது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்த நிலையில் இந்த அவசர ஒன்றுகூடல் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய சந்திப்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அதிகம் பேசப்படும் அமைச்சர் சஜித் பிரேமதாஸ மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

You My Like this video