கோத்தபாயவை கூட்டமைப்பினர் சந்தித்தனரா?

Report Print Steephen Steephen in அரசியல்

மகிந்த ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன் இடையில் சந்திப்பொன்று நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராஜபக்சவினர் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த சந்திப்பு நடந்துள்ளதுடன் இது தொடர்பான செய்திகள் எதுவும் வெளியாகவில்லை.

கடந்த 19 ஆம் திகதி நடைபெற்ற அவசர அமைச்சரவைக் கூட்டத்தில் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதற்காக கொண்டு வந்த யோசனையை ஐக்கிய தேசியக் கட்சியின் சஜித் அணியினர் எதிர்த்தன் பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ராஜபக்சவினருக்கும் இடையிலான இந்த சந்திப்பு நடந்துள்ளதாக கூறப்படுகிறது.