புர்கா அணிய விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது சிக்கலுக்குரியது

Report Print Steephen Steephen in அரசியல்

நிகாப், புர்கா மற்றும் முகத்தை மூடும் வகையில் அணியும் தலை கவசம் என்பவற்றுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க அரசாங்கம் எடுத்த தீர்மானம் தேசிய பாதுகாப்பு தொடர்பான விடயத்தில் பிரச்சினைக்குரியது என நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் அரசியல்வாதிகளின் தேவையின் அடிப்படையில் இந்த தடையை நீக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

நிகாப் மற்றும் புர்காவை தடை செய்ய வேண்டும் என்ற கருத்து மக்களிடம் இருந்தது. நாமும் இது தொடர்பான யோசனைகளை நாடாளுமன்றத்தில் முன்வைத்தோம். இவற்றை தடையும் யோசனை அரசாங்கம் கொண்டு வரும் என எதிர்பார்த்தோம். எனினும் முஸ்லிம் அரசியல்வாதிகளின் தேவைக்கு அமைய அரசாங்கம் அதனை கொண்டு வரவில்லை எனவும் மகிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே இந்த தடை நீக்கப்பட்டதை தானும் எதிர்ப்பதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். புர்காவோ, தலை கவசமோ முகத்தை மூடிக்கொண்டு செல்வது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பிரச்சினையானது.

முஸ்லிம் மக்களும், முஸ்லிம் அல்லாத மக்களும் இதனை புரிந்துக்கொள்ள வேண்டும். அனைத்தையும் விட நாடே முக்கியமானது. அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டு, தடை நீங்கி விட்டது என நினைத்து மக்கள் அவற்றை அணிந்து சென்றால் அது தவறானது எனவும் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை தேர்தலை இலக்கு வைத்தே அரசாங்கம் நிகாப், புர்கா, முகத்தை மூடும்படியான தலை கவசம் என்பவற்றுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.