முன்னேஸ்வரத்தில் வழிபட்ட கோத்தபாய

Report Print Steephen Steephen in அரசியல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் கோத்தபாய ராஜபக்ச மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் முன்னேஸ்வரம் சிவாலயத்தில் இன்று விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னேஸ்வரம் சிவாலயத்தின் பிரதம குருக்கள் சிவஸ்ரீ பத்மநாப குருக்கள் பூஜையை நடத்தி வைத்துள்ளார்.

இந்த நிகழ்வில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ், நாடாளுமன்ற உறுப்பினர்களான அருந்திக பெர்னாண்டோ, சனத் நிஷாந்த உட்பட அந்த கட்சியின் பிரமுகர்கள் கலந்துக்கொண்டுள்ளனர்.

Latest Offers